பாக்ஸ் ஆபிஸ்: வட இந்தியாவில் தெறிக்கவிடும் வசூல் வேட்டை செய்யும் ரஜினியின் ஜெயிலர் 2...
ஜெயிலர் 2
தமிழ் சினிமாவில் இந்த வருடத்தில் கடைசியாக வெளியான பெரிய நடிகரின் திரைப்படம் என்றால் அது ஜெயிலர் 2 தான்.
முதல் பாக வெற்றியை தொடர்ந்து ரஜினி, நெல்சனுடனே கூட்டணி அமைத்து ஜெயிலர் 2வில் நடித்தார். சன் பிக்சர்ஸ் படத்தை தயாரிக்க அனிருத் இசையில் கடந்த அக்டோபர் 15ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.

இதில் ரஜினியுடன், ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலன், சுராஜ் வெஞ்சரமூடு, ஹிருத்திக் ரோஷன், மோகன்லால், சிவராஜ்குமார் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
ஆக்ஷன், காமெடி, நிறைய நட்சத்திரங்கள் என படம் முழுவதும் ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் இருந்தது.

வசூல் வேட்டை
படம் வெளியாகி முதல் நாள் முதலே செம வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
தமிழகத்தை தாண்டி ஆந்திராவில் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. உலகம் முழுவதும் படம் வெளியாகி 18 நாட்களில் ரூ. 800 கோடிக்கு மேல் வசூல் வேட்டை செய்திருக்கிறது.
இப்படம் வட இந்தியாவில் 18 நாட்களில் ரூ. 60 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது.
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri
November 2026 Tarot Predictions: நவம்பர் மாதம் உங்களுக்கு என்ன மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது? Manithan
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri