தொடங்கியது நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 பட படப்பிடிப்பு... போட்டோவுடன் வந்த அறிவிப்பு
ஜெயிலர்
கடந்த 2023ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் ஜெயிலர்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினியுடன் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, மிர்ணா மேனன், யோகி பாபு, சுனில் என பலர் நடித்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் ரூ. 200 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் ரூ. 650 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியது.
2ம் பாகம்
முதல் பாகத்தில் வந்த நடிகர்கள் அனைவரும் இந்த 2ம் பாகத்திலும் இடம்பெறுகிறார்கள் என கூறப்படுகிறது.
கேமியோ ரோலில் மாஸ் காட்டிய மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோரும் இப்படத்திலும் வருவார்களாம், அதோடு புது வில்லன்கள் இதில் களமிறக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
தற்போது சன் பிக்சர்ஸ் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டதாக ஒரு சூப்பர் போஸ்டருடன் அறிவித்துள்ளனர்.