ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இணையும் டாப் நடிகர்.. வெளிவந்த அட்டகாசமான அப்டேட்
ஜெயிலர் 2
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரவிருக்கும் படம் கூலி. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
கூலி படத்தை தொடர்ந்து தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. முதல் பாகத்தை போலவே நடிகர் சிவராஜ்குமார் மற்றும் மோகன்லால் கேமியோ ரோலில் நடிக்கின்றனர்.
அட்டகாசமான அப்டேட்
இந்நிலையில், இப்படம் குறித்து ஒரு அதிரடி அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி, தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாகர்ஜுனாவை ஜெயிலர் படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க படக்குழு பேசியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள கூலி திரைப்படத்திலும் நாகர்ஜுனா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri
