பட்டத்தை பறிக்க 100 பேர்.. ஜெயிலர் பாடல் சர்ச்சைக்கு Lyricist விளக்கம்
சூப்பர்ஸ்டார் ரஜினியின் அடுத்த படமான ஜெயிலர் படத்தின் இரண்டாம் சிங்கிள் ஹுக்கும் நேற்று வெளியாகி இருந்தது. காவாலா பாடல் தமன்னா டான்ஸுக்கு ட்ரெண்ட் ஆனது போல, இந்த Hukum பாடல் lyricsக்காக ட்ரெண்ட் ஆகி வருகிறது.
"பேரை தூக்க 4 பேர், பட்டத்தை பறிக்க 100 பேர்" என வரும் lyrics ட்விட்டரில் பேசு பொருளாகி இருக்கிறது. அடுத்த சூப்பர்ஸ்டார் விஜய் என ஒரு பேச்சு இருக்கும் நிலையில், அவரை குறிப்பிட்டு தான் இப்படி ஒரு வசனம் எழுதி இருக்கிறார் என சர்ச்சை எழுந்திருக்கிறது.
Lyricist விளக்கம்
இந்நிலையில் தற்போது Lyricist சுப்பு அளித்திருக்கும் பேட்டியில் தான் ஒரு தீவிர ரஜினி ரசிகன் என்றும், அவர் கெத்து என்று தான் எழுதி இருக்கிறேன், மற்றவர்கள் வெத்து என ஒரு இடத்திலும் எழுதவில்லை என்றும் கூறி இருக்கிறார். இப்படி சர்ச்சை வரும் என டீமில் கூட யாரும் நினைக்கவில்லை என கூறி இருக்கிறார்.
மேலும் இந்த பாடலை கேட்டு சூப்பர்ஸ்டார் ரஜினியே வாய்ஸ் நோட் அனுப்பி பாராட்டி இருந்தார் என சுப்பு கூறி இருக்கிறார்.
அவரது முழு பேட்டி இதோ..
ஏர்போர்ட்டில் மகனுடன் சூர்யா.. போட்டோ எடுக்க வந்தவர்களுக்கு போட்ட கண்டிஷன்