தமிழகத்தில் மட்டுமே செம பாக்ஸ் ஆபிஸ் வசூல் வேட்டை நடத்திய ஜெயிலர்- இதுவரை இத்தனை கோடியா?
ஜெயிலர் திரைப்படம்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வெளியான திரைப்படம் ஜெயிலர். ரஜினியை தாண்டி தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் என பலர் நடித்துள்ளனர்.
அனிருத் இசையில் வெளியான இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் செம ஹிட் தான்.
இப்படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் ஜெயிலர் மூலம் வெற்றியை கண்டுள்ளனர். இப்படம் உலகம் முழுவதும் ரூ. 525 கோடி வரை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அண்மையில் வெளியிட்டுள்ளனர்.

தமிழக வசூல்
உலகம் முழுவதும் நல்ல வசூல் வேட்டை நடத்தும் ஜெயிலர் திரைப்படம் தமிழகத்தில் இதுவரை ரூ. 170 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் நாட்களிலும் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்கின்றனர்.

குழந்தை பெற்ற பிறகு உடல் எடையை குறைக்க இருந்த டயட்- சீரியல் நடிகை அபிநவ்யா டிப்ஸ் 
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    