தமிழகத்தில் ரத்து ஜெயிலர் படம் பார்க்க பெங்களூருக்கு படையெடுக்கும் ரஜினி ரசிகர்கள்- டிக்கெட் விலை இத்தனை ஆயிரமா?
ஜெயிலர் படம்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடைசியாக விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வெளியாகி இருந்தது. ஆனால் படத் சொல்லும் அளவிற்கு சரியான வரவேற்பு பெறவில்லை, இதனால் தளபதி ரசிகர்கள் கடும் சோகத்தில் இருந்தார்கள்.
இப்போது நெல்சன் ரஜினியை வைத்து ஜெயிலர் என்ற படத்தை இயக்கியுள்ளார், சன் பிக்சர்ஸ் தான் இப்படத்தையும் தயாரித்துள்ளார்கள்.
ரஜினியின் கடைசி படமான அண்ணாத்த சரியான வரவேற்பு பெறவில்லை.
எனவே நெல்சன் மற்றும் ரஜினிக்கு வெற்றி தர வேண்டிய முக்கிய படமாக ஜெயிலர் அமைந்துள்ளது.

டிக்கெட் விலை
தமிழகத்தில் அதிகாலை காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் அதிக கிரேஸ் இருக்கும், ஆனால் தமிழகத்தில் முதல் காட்சி 9 மணிக்கு தான் தொடங்க இருக்கிறதாம்.
பெங்களூரில் காலை 6 மணிக்கே தொடங்க இருக்கிறது. அதிலும் பெங்களூருவில் முகுந்தா, பாலாஜி, பூர்ணிமா உள்ளிட்ட தனி திரையரங்குகளில் அதிகாலை 4 மணிக்கு திரையிடப்படுவதாக கூறப்படுகிறது.
பெங்களூருவில் தனி திரையரங்குகளில் ஒரு டிக்கெட் ரூ.300 முதல் ரூ.1000 வரை விற்பனை செய்யப்பட்டது. பி.வி.ஆர்., ஐநாக்ஸ் போன்ற மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் ரூ.600 முதல் ரூ.2200 வரை டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது.
இதனிடையே, சிலர் டிக்கெட்டுகளை மொத்தமாக வாங்கி, கள்ளச் சந்தையில் ரூ.5,000-க்கு விற்பனை செய்வதாகவும் கூறப்படுகிறது.