முதல் நாள் முன்பதிவின் மூலம் ரஜினியின் ஜெயிலர் படம் செய்த கலெக்ஷன்- இத்தனை கோடிகளா, தாறுமாறு
ரஜினியின் ஜெயிலர்
ரஜினிக்கு அண்ணாத்த, நெல்சன் திலீப்குமாருக்கு பீஸ்ட் கடைசியாக வெளியான இருவரின் படங்கள். இந்த இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபிஸிலும், வசூலிலும் சரியான அங்கீகாரம் பெறவில்லை.
எனவே இயக்குனர் நெல்சன், நடிகர் ரஜினி இருவருக்குமே ஜெயிலர் படம் முக்கியமானதாக உள்ளது.
இன்று படு பிரம்மாண்டமாக ரஜினியின் ஜெயிலர் வெளியாகிவிட்டது, தமிழகத்தில் முதல் காட்சி 9 மணிக்கு மேல் தான் ஆனால் மற்ற இடங்களில் ரிலீஸ் ஆகிவிட்டது.
படம் சூப்பராக இருப்பதாகவும் கண்டிப்பாக படம் வசூலில் கலக்கும் என படத்தை பார்த்தவர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
ப்ரீ புக்கிங் கலெக்ஷன்
ஜெயிலர் படத்திற்கு ப்ரீ புக்கிங் எல்லா இடங்களிலும் அமோகமாக நடந்திருப்பதாக நமக்கு தகவல்கள் வந்து கொண்டிருந்தன. அதன்படி தற்போது Pre Sales மூலம் படம் எல்லா இடங்களிலும் எவ்வளவு கலெக்ஷன் பெற்றுள்ளது என்ற விவரம் வந்துள்ளது.
- North America : 1.6M USD (ரூ. 13.5 கோடி)
- கர்நாடகா- ரூ. 7.5 கோடி
- Europe- 450K € (ரூ. 4.1 கோடி)
- Gulf- 650K USD (ரூ. 5.4 கோடி)
- மலேசியா, சிங்கப்பூர்- ரூ. 5.2 கோடி
- தமிழ்நாடு- ரூ. 20 கோடி
- AP/TG- ரூ. 7.5 கோடி
- கேரளா- ரூ. 1.9 கோடி
- மற்ற இடங்கள்- ரூ. 5.5 கோடி
மொத்தம் ரூ. 80.01 கோடி வரை வந்துள்ளது,
எனவே முதல் நாளில் படத்தின் வசூல் வேட்டை அதிரப்போகிறது என கூறப்படுகிறது.

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
