OTTக்கு வரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் லால் சலாம்.. எப்போது தெரியுமா
லால் சலாம்
2024ல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த திரைப்படம் லால் சலாம். இப்படத்தை ரஜினியின் மகளும் பிரபல இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருந்தார்.
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து விஷ்ணு விஷால், செந்தில், விக்ராந்த் உள்ளிட்ட பலரும் நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ரசிகர்கள் எதிர்பார்ப்பை இப்படம் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை.
கடந்த பிப்ரவரி மாதம் வெளியான இப்படம் இதுவரை OTT தளத்தில் வெளிவரவில்லை. ஒரு படம் வெளிவந்த 4 வாரங்கள் அல்லது 8 வாரங்களுக்குள் OTTல் வெளிவந்துவிடுகிறது.
OTT வெளியிடு
ஆனால், பிப்ரவரி மாதம் வெளிவந்த லால் சலாம் திரைப்படம் இதுவரை கிட்டதட்ட 7 மாதங்களுக்கும் மேல் ஆகியும் எந்த ஒரு OTT-யிலும் வெளிவரவில்லை. இந்த நிலையில், படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் குறித்து சமீபத்தில் பேசியுள்ளார்.
இதில் லால் சலாம் திரைப்படம் விரைவில் OTTல் வெளியாகும் என தெரிவித்துள்ளார். இப்படத்தின் OTT உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாகவும், திரையரங்கில் பார்த்ததை விட OTTல் இயக்குனரின் எஸ்ட்டெண்டெட் வெர்ஷனாக, அதாவது திரையரங்கில் பார்க்காத காட்சிகளும் OTTல் வரும் என சொல்லப்படுகிறது.

இமயமலையால் அடித்த ஜாக்பாட்.. பாகிஸ்தானில் தங்கச் சுரங்கம்- கோடிக்கணக்கில் கிடைக்க போகுது! IBC Tamilnadu

SBI JanNivesh SIP முதலீட்டு திட்டம்.., குறைந்தபட்சமாக ரூ.250 முதலீடு செய்து ரூ.7 லட்சம் பெறலாம் News Lankasri
