44வது பிறந்தநாளை மனைவியுடன் ரஜினிகாந்த் எங்கே கொண்டாடியுள்ளார் பாருங்க... போட்டோஸ் இதோ
நடிகர் ரஜினி
நடிகர் ரஜினி, இந்திய சினிமா கொண்டாடும் சூப்பர் ஸ்டார்.
இவரது படம் ரிலீஸ் என்றாலே தமிழகம் தாண்டி ஆந்திரா, கேரளா, கர்நாடகா, நார்த் இந்தியா என எல்லா இடங்களிலும் திருவிழா கோலாகலமாக இருக்கும். இவரது நடிப்பில் கடைசியாக வேட்டையன் திரைப்படம் வெளியாகி இருந்தது.
தற்போது ரஜினி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகளை முடித்த கையோடு ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உள்ளார்.
திருமண நாள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 1981ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26ம் தேதி லதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
திருமணம் எளிமையாக நடந்தாலும் திருமண வரவேற்பு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவர்களின் திருமண வாழ்க்கை 44 ஆண்டுகள் நிறைவடைந்து 45வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளார்கள்.
தங்களது 44வது திருமண நாளை துபாயில் கொண்டாடியுள்ளனர்.