ரஜினி போன் செய்ததை வெளியில் சொல்லாமல் மறைத்த இயக்குனர்! இதுதான் காரணமாம்
விஜய் சேதுபதி நடித்திருக்கும் மாமனிதன் படத்தின் இயக்குனர் சீனு ராமாசாமி தனக்கு ரஜினி போன் செய்து பாராட்டியதை மூன்று மாதங்களுக்கு பிறகு இப்போது வெளியில் கூறி இருக்கிறார்.
மாமனிதன்
சீனு ராமசாமி இயக்கி இருக்கும் மாமனிதன் படத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி ஆகியோர் நடித்து இருக்கின்றனர்.
யுவன் தயாரித்து உள்ள இந்த படத்திற்கு அப்பா இளையராஜா உடன் சேர்ந்து யுவனே இசையமைத்து இருக்கிறார்.

பாராட்டிய ரஜினி
மாமனிதன் படத்தை பார்த்துவிட்டு சூப்பர்ஸ்டார் ரஜினி பாராட்டி இருக்கிறார். அவர் பாராட்டி மூன்று மாதங்கள் ஆகும் நிலையில் தற்போது தான் அதை பற்றி கூறி இருக்கிறார் அவர்.
அப்போதே சொல்லி இருந்தால் வியாபாரத்திற்காக இப்படி சொல்கிறேன் என சொல்வார்கள், அதனால் இப்போது வியாபாரம் முடிந்து ரிலீஸ் தேதி உறுதி ஆன பிறகு வெளியில் சொல்வதாக சீனு ராமசாமி தெரிவித்து உள்ளார்.
"ஜனவரியில் #மாமனிதன் படம் பார்த்து பாராட்டி,நெகிழ்வாக தொலைபேசியில் நீங்கள் பேசியதை வெளியே சொல்லவில்லை அது விற்பனைக்காக நான் சொல்வதாக சொல்வார்கள். நீங்கள் படம் பார்த்ததே ஆசிகள் அதுபோதும் என்றேன். இன்று வெளியீட்டு தேதி தானாகவே விற்பனையாவும் முடிந்தது சார். நன்றி @rajinikanth ?" என அவர் ட்விட் செய்து உள்ளார்.
ஜனவரியில்#மாமனிதன் படம் பார்த்து
— R.Seenu Ramasamy (@seenuramasamy) March 26, 2022
பாராட்டி,நெகிழ்வாக தொலைபேசியில் நீங்கள் பேசியதை வெளியே சொல்லவில்லை
அது விற்பனைக்காக நான் சொல்வதாக சொல்வார்கள்
நீங்கள் படம் பார்த்ததே
ஆசிகள் அதுபோதும் என்றேன்.
இன்று வெளியீட்டு தேதி
தானாகவே விற்பனையாவும்
முடிந்தது சார்.
நன்றி @rajinikanth ? pic.twitter.com/CbOTISyXTI