விஜய் பதவி ஏற்க கூடாது என செயல்பட்டாரா ரஜினி? சர்ச்சைக்கு அவரது மேனேஜர் விளக்கம்

By Parthiban A May 10, 2026 02:05 PM GMT
Report

நடிகர் விஜய்யின் தவெக தேர்த்தலில் 108 தொகுதிகளில் ஜெயித்து இருந்தாலும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லை என சொல்லி ஆளுநர் அவரை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. அதனால் நான்கு நாட்களுக்கு கூட்டணி பேச்சுவார்த்தை தான் மற்ற கட்சிகளுடன் விஜய் நடத்தி வந்தார்.

அந்த நேரத்தில் திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளும் கூட்டணி சேர பேச்சுவார்த்தை நடப்பதாக செய்தி வெளியாகி மக்களை அதிர்ச்சி ஆக்கியது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் சென்று முன்னாள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசிய பிறகு தான் அப்படி ஒரு செய்தி வந்தது. ரஜினி தான் இந்த பேச்சுவார்த்தைக்கு காரணமாக இருக்கிறார் எனவும் பரபரப்பாக இணையவாசிகள் குற்றம் சாட்டினார்கள்.

விஜய் பதவி ஏற்க கூடாது என செயல்பட்டாரா ரஜினி? சர்ச்சைக்கு அவரது மேனேஜர் விளக்கம் | Rajinikanth Manager Riaz On Superstar Meet Stalin

ரஜினி மேனேஜர் விளக்கம்

இந்நிலையில் ரஜினிகாந்த்தின் மேனேஜர் ரியாஸ் தற்போது இந்த சர்ச்சை பற்றி X தளத்தில் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

"சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் மதிப்பிற்குரிய மூ க ஸ்டாலின் அவர்களும் 42 ஆண்டு கால நண்பர்கள் . நட்பு ரீதியா திரு ஸ்டாலின் சார் அவர்களை சந்தித்தார் .இதுலே எந்த அரசியலும் இல்லே . இதை மீடியா தேவையில்லாமே வேறே மாதிரி எதையும் பரப்பாதீங்க என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என அவர் பதிவிட்டு உள்ளார். 

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US