ரஜினிக்கு எழுதிய கதையில் நடித்த விஜய்!.. அந்த படம் மாஸ் ஹிட்
விஜய்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் நடிக்கும் தளபதி 68 படத்தின் ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த திரைப்படம் டைம் ட்ராவலை மையாக வைத்து வெங்கட் பிரபு திரைக்கதையை அமைப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

மாஸ் ஹிட்
கடந்த 2002 -ம் ஆண்டு விஜய் நடிப்பில், ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் வெளிவந்த பகவதி திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
ஏ.வெங்கடேஷ் ரஜினிக்காக தான் இந்த படத்தின் கதையை எழுதியுள்ளார். ஆனால் இவரால் ரஜினியை சந்திக்க முடியவில்லையாம். எனவே, அந்த கதையில் விஜயை நடிக்க வைத்தார்.
விஜய்க்கு இந்த படத்தின் கதை கேட்டதும் பிடித்துப்போய் ஓகே சொல்லிவிட்டார். இந்த படத்தின் கதையும் பாட்ஷா பட ஸ்டைலில் தான் இருக்கும்.

You May Like This Video