ரீ-ரிலீஸுக்கு ரெடியான ரஜினிகாந்தின் பக்கா மாஸ் படமான படையப்பா.. எப்போது?
படையப்பா
கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து 1999ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் படையப்பா.
இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், லட்சுமி, அப்பாஸ், நாசர், மணிவண்ணன், ரமேஷ் கண்ணா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இவர்கள் அனைவரையும் தாண்டி நடிகர் திலகன் சிவாஜி கணேசன் இப்படத்தில் ரஜினியின் தந்தையாக நடித்து பட்டையை கிளப்பி இருப்பார்.
இப்படத்தின் வெற்றிக்கு மிகமுக்கியமான காரணங்களில் ஒன்று இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். ரஜினிக்கான ஹீரோ பிஜிஎம், வில்லி ரம்யா கிருஷ்ணனுக்கான பிஜிஎம் என பின்னணி இசையில் கலக்கி இருப்பார்.
அதுமட்டுமின்றி மின்சார பூவே, எம் பேரு படையப்பா, சுத்தி சுத்தி வந்தீங்க, வெற்றி கொடி கட்டு ஆகிய பாடல்கள் இன்று வரை நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.

எப்போது?
இன்று வரை மக்கள் மத்தியில் இடம் பெற்றுள்ள படையப்பா திரைப்படம் தற்போது ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வகையில், படையப்பா டிசம்பர் 12 அன்று புதிய தொழில்நுட்பத் தரத்துடன் மீண்டும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
