169 படத்தில் ரஜினிகாந்தின் பிறந்தநாள் அன்று வெளிவந்த ஒரே ஒரு திரைப்படம்.. அது எந்த படம் தெரியுமா

By Kathick Jul 23, 2022 12:00 PM GMT
Report

ரஜினிகாந்தின் பிறந்தநாள் அன்று வெளிவந்த ஒரே ஒரு திரைப்படம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக உருவாகவுள்ள திரைப்படம் ஜெயிலர். நெல்சன் திலிப்குமார் இயக்கும் இப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்குகிறது. ஜெயிலர் திரைப்படம் நடிகர் ரஜினிகாந்திற்கு 169வது படமாகும். ஆம், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பயணம் செய்து வரும் நடிகர் ரஜினிகாந்தின் 169வது படம் தான் இந்த ஜெயிலர்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார் ரஜினிகாந்த். இந்நிலையில், 169 படங்களில் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் உருவான லிங்கா திரைப்படம் மட்டும் தான், ரஜினிகாந்த் பிறந்தநாள் ஆன டிசம்பர் 12ஆம் தேதி வெளிவந்துள்ளது.

169 படத்தில் ரஜினிகாந்தின் பிறந்தநாள் அன்று வெளிவந்த ஒரே ஒரு திரைப்படம்.. அது எந்த படம் தெரியுமா | Rajinikanth Movie Released In His Brithday  

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லிங்கா திரைப்படம் டிசம்பர் 12ஆம் தேதி 2014ஆம் ஆண்டு ரஜினிகாந்தின் பிறந்தநாள் அன்று வெளிவந்தது ரஜினியின் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US