அடுத்து முன்னணி இயக்குநர் படத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்.. மாஸ் காம்போ
ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ஜெயிலர். இப்படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் முதல் முறையாக நடித்து வருகிறார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகர்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், சோப்பின் சபீர், உபேந்திரா ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
அதுமட்டுமின்றி, நடிகை பூஜா ஹெக்டே இப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த படத்திற்கு பின் ரஜினி ஜெயிலர் 2 படத்தில் நடிக்கவுள்ளார்.
மாஸ் காம்போ
இதன் பின் அடுத்து ரஜினி யார் இயக்கத்தில் நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, ரஜினியின் அடுத்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த், கார்த்திக் சுப்புராஜ் இணையும் படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த் ஏற்கனவே கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 'பேட்ட' படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சனி பெயர்ச்சி 2025..கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் - உங்க ராசி இருக்கா தெரிஞ்சுக்கோங்க! IBC Tamilnadu
