அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்கவிருக்கும் படம் இதுதான் - யார் இயக்குனர் தெரியுமா
தமிழ் திரையுலகில் கடந்த 40 ஆண்டுகளாக முன்னணி நட்சத்திரமாக வளம் வருபவர் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் இவருடன் இணைந்து நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா, சூரி சதீஸ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் அண்ணாத்த படத்திற்கு பிறகு ரஜினி நடிக்கவிருக்கும் படம் யாருடைய இயக்கத்தில் இருக்கும் என்ற கேள்வி தற்போதே ரசிகர்கள் மத்தியில் வந்துவிட்டது.
இந்நிலையில் நடிகர் ரஜினி அடுத்ததாக தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தான் நடிக்கவிருக்கிறார் என தகவல் கிசுகிசுக்கப்படுகிறது.
மேலும் சமீபத்தில் இயக்குனர் பெரியசாமியிடம் போன் காலில் பேசியுள்ளாராம் ரஜினி.
இயக்குனர் தேசிங்கு பெரியசாமி கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
புத்தாண்டு ராசிபலன்.., நெருப்பு ராசிகளான மேஷம், தனுசு, சிம்மத்திற்கு எப்படி இருக்கும்? News Lankasri