ரஜினி 169 பட இயக்குனர் இவரா? 6 மணிக்கு சன் பிக்சர்ஸ் வெளியிடவுள்ள அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு எப்போது வரும் என்று தான் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். அவரது முந்தைய படமான அண்ணாத்த பெரிய அளவில் வரவேற்பை பெறாத நிலையில் அடுத்த கூட்டணி யாருடன் சேரப்போகிறார் என கேள்வி எழுந்தது.
பல இயக்குனர்கள் ரஜினியிடம் கதை சொல்லி இருப்பதாக தகவல் வந்தாலும் உறுதியான தகவல் எதுவும் வரவில்லை. இந்நிலையில் பீஸ்ட் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிக்க ரஜினி ஓகே சொல்லி இருப்பதாக தகவல் பரவி வருகிறது. அது பற்றிய அறிவிப்பும் இன்று வர இருக்கிறது என சொல்லப்படுகிறது.
அதற்கேற்றாற்போல சன் பிக்சர்ஸ் தற்போது இன்று மாலை 6 மணிக்கு முக்கிய அப்டேட் ஒன்று வெளியிடுவதாக அறிவித்து உள்ளது. அனேகமாக அது ரஜினி பட அறிவிப்பாக தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Announcement alert ?
— Sun Pictures (@sunpictures) February 10, 2022
Today @ 6 PM pic.twitter.com/yijX9z36vI