நடிகர் ரஜினிகாந்த் அடுத்த இந்த இயக்குனருடன் தான் இணைகிறாரா?- யார் தயாரிப்பில் தெரியுமா?
நடிகர் ரஜினிகாந்த் தனது படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் பல சாதனைகளை புரிந்தவர்.
பாக்ஸ் ஆபிஸில் எப்போதும் முன்னிலையில் இருக்கும் ரஜினியின் படங்கள் அண்ணாத்த படத்தில் அதனை செய்யவில்லை.
ஆரம்பத்தில் சூடு பிடித்த வசூல் நாட்கள் செல்ல செல்ல மழை போன்ற காரணங்களால் அப்படியே குறைந்துவிட்டது. சிலர் மழை பிரச்சனை ஓய்ந்த பிறகு படத்தின் வசூல் அதிகமாகும் என எதிர்ப்பார்க்க நல்ல விஷயம் எதுவும் நடக்கவில்லை.
அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினி இன்னும் எந்த ஒரு கதையையும் உறுதி செய்யவில்லை. இடையில் தனுஷ் தயாரிப்பில் ரஜினி நடிக்க போகிறார் என்ற செய்தி எல்லாம் வந்துகொண்டிருந்தன.
தற்போது வரும் தகவல் என்னவென்றால் ரஜினி அடுத்த படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலேயே தான் நடிக்க இருக்கிறாராம்.
படத்தை பாண்டிராஜ் இயக்க ரஜினி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது, ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

ஒரே ஒரு மாணவன் மற்றும் ஒரே ஒரு ஆசிரியருக்காக செயல்படும் அரசு பள்ளி.., எந்த மாநிலத்தில்? News Lankasri
