20 நாட்கள்.. ஜெயிலர் 2 குறித்து அதிரடி அப்டேட் கொடுத்த ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கேரியரில் அதிக வசூல் செய்த திரைப்படமாக ஜெயிலர் வலம் வருகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். மேலும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷ்ராஃப் ஆகியோர் நடித்திருந்தனர்.
இப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்று வசூலில் சாதனை படைத்தது. இதன் காரணமாக ஜெயிலர் படத்தின் 2 - ம் பாகத்தை எடுக்க முடிவு செய்தார் நெல்சன்.
தற்போது, இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. முடித்துக் கொடுத்துவிட்டு அதே வேகத்தில், 'ஜெயிலர் 2' படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார்.
அதிரடி அப்டேட்
இந்நிலையில், ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் இன்று கோவை சென்றுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
அப்போது அவரிடம் ஜெயிலர் 2 படம் குறித்து கேள்வி எழுப்ப அதற்கு, 20 நாட்கள் படப்பிடிப்பிற்காக கோவை வந்துள்ளேன். ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை" என்று தெரிவித்துள்ளார்.