Re Release ப்ரீ புக்கிங்கில் செம மாஸ் காட்டிய ரஜினியின் படையப்பா... இத்தனை கோடி கலெக்ஷனா?
படையப்பா
வசூல் கிங் என்றால் அது நான் தான் என மீண்டும் நிரூபிக்க களத்தில் இறங்குகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி.
நாளை டிசம்பர் 12, இந்திய சினிமா கொண்டாடும் ரஜினியின் பிறந்தநாள், அந்த ஸ்பெஷல் தினத்தை கொண்டாடும் விதமாக ரஜினியின் சூப்பர் டூப்பர் ஹிட் படமான படையப்பா படம் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளது.

ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு என பல முன்னணி நடிகர்களின் ஹிட் படங்கள் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகி செம கலெக்ஷன் செய்து வருகிறது. இதுவரை வெளியான நடிகர்களின் படங்களில் விஜய்யின் கில்லி ரூ. 25 கோடிகள் வரை வசூலித்ததாக கூறப்படுகிறது.
கலெக்ஷன்
தற்போது விஜய்யின் கில்லி பட வசூலையும் ஓரங்கட்டும் வகையில் ரஜினியின் படையப்பா பட கலெக்ஷன் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ப்ரீ புக்கிங்கில் ரிலீஸ் முன்பே அதிக டிக்கெட் விற்பனையானது படையப்பா படத்திற்காக தான் என ரோஹினி திரையரங்க பக்கத்தில் அறிவித்தனர்.
இந்த நிலையில் தற்போது ரஜினியின் படையப்பா படம் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே உலகம் முழுவதும் ரூ. 2 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரித்தானியாவில் இந்திய வம்சாவளியினருக்கு ஆண் குழந்தைகள் பிறப்பு அதிகம்: சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள விடயம் News Lankasri
வெனிசுலாவின் எண்ணெய் டேங்கரை அமெரிக்கா கைப்பற்றிய பரபரப்பு காட்சிகள்! டிரம்ப் சொன்ன தகவல் News Lankasri