ஜெயிலர் 2 திரைப்படம்.. இணையத்தில் வைரலாகும் ரஜினியின் போட்டோ
ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கேரியரில் அதிக வசூல் செய்த திரைப்படமாக ஜெயிலர் வலம் வருகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
மேலும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷ்ராஃப் ஆகியோர் நடித்திருந்தனர்.
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயிலர் படத்தின் 2 - ம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டு தற்போது கேரளாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
முதல் பாகத்தை போலவே நடிகர் சிவராஜ்குமார் மற்றும் மோகன்லால் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.
போட்டோ
இந்நிலையில், கேரள மாநில பொதுப்பணித்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரான பி.ஏ. முகமது ரியாஸ் ரஜினிகாந்தை நேரில் சந்தித்துள்ளார். அப்போது எடுத்த போட்டோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

கடலில் நீராடிய 10க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கால் முறிவு - திருச்செந்தூரில் பரபரப்பு! IBC Tamilnadu
