நீங்க தான் நிஜ தளபதி.. விஜய் சொல்லாமல் வேறு நடிகரை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. யாரை தெரியுமா..
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் தளபதி விஜய்.
இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மிகப்பெரிய ரசிகர் என்பதை தமிழ் திரையுலகமே அறியும்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பிரபல நடிகரும் ஸ்டண்ட் மாஸ்டருமான தினேஷ் என்பவரை ' நீங்க தான் நிஜ தளபதி ' என புகழ்ந்து பேசியுள்ளார்.
ஆம் ரஜினி நடிப்பில் வெளியான தளபதி படத்தில் முதல் காட்சியில் ரஜினியுடன் சண்டை போடுபவர் தான் ஸ்டண்ட் தினேஷ்.
ஆனால் தளபதி படத்தின் மூலம் பிரபலமானதால் ' தளபதி தினேஷ் ' என இவருக்கு பேச கிடைத்தது.
இதனால் ஒரு முறை தளபதி தினேஷை பார்த்த பொழுது ரஜினி நீங்கள் அப்படத்தில் இறந்து போனதால் தான் நான் அந்த இடத்திற்கு வந்தேன் என்று சொல்லி நீங்க தான் நிஜ தளபதி என பாராட்டினாராம்.
இதனை தளபதி தினேஷ் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.