இவர் நடிப்பை பார்த்து.. மேடையில் முன்னணி நடிகரை புகழ்ந்து தள்ளிய ரஜினிகாந்த்
வேட்டையன்
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற அன்பான பட்டத்தோடு அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். தற்போது இவர் நடிப்பில் வரும் 10 - தேதி வெளிவர உள்ள படம் வேட்டையன்.
TJ ஞானவேல் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ரஜினி உடன் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர்.
நட்சத்திர பட்டாளம் நடித்து வெளியாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிரிபார்ப்பு எழுந்துள்ளது. தற்போது, படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில், படக்குழுவினர் அனைவரும் படம் தொடர்பாக பல பேட்டிகளில் கலந்து கொண்டு வருகின்றனர்.
முன்னணி நடிகர்
இந்நிலையில், படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், அவருடன் பணியாற்றிய நடிகர் பகத் பாசிலின் கதாபாத்திரம் குறித்து சில சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார்.
அதில், "இந்த படத்தில் நடிகர் பகத் பாசில் ஒரு சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முதலில் இந்த கதாபாத்திரம் குறித்து கேட்ட போது இந்த படத்தில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்தேன்.
அப்போது இந்த படத்தின் இயக்குனர் என்னிடம் வந்து இந்த கதாபாத்திரத்தை ஒருவரால் மட்டுமே மிகச் சிறப்பாக நடிக்க முடியும். அது வேறு யாருமில்லை நடிகர் பகத் பாசில் தான் என்று கூறினார். இயக்குனர் கூறியது போல் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் பகத்" என்று மேடையில் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

7 அறைகள் முதல் உடற்பயிற்சி கூடம் வரை.., சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள வசதிகள் என்னென்ன? News Lankasri

HDFC வங்கி 5 வருட FD-ல் ரூ.3 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
