100 கோடி பட்ஜெட் படத்தை வேண்டாம் என கூறிய ரஜினிகாந்த்.. ஓகே சொல்லி கமிட்டன முன்னணி ஹீரோ
ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் கைவசம் தற்போது மூன்று படங்கள் உள்ளன. இதில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள படம் தான் லால் சலாம். இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வருகிறது.
இதை தொடர்ந்து TJ ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் தான் தலைவர் 170. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி.
இப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்த நிலையில், படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரில் மாதத்தில் துவங்கும் என கூறப்படுகிறது.
நிராகரித்த ரஜினி
இந்நிலையில், இயக்குனர் தேசிங் பெரியசாமி கதை ஒன்றை ரஜினியிடம் கூறியுள்ளார். வரலாற்று கதைக்களத்தில் இப்படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார்.
ஆனால், அந்த கதையை ரஜினிகாந்த் நிராகரித்துவிட்டாராம். இதன்பின் அந்த கதையை சிம்புவிடம் கூறி ஓகே செய்துள்ளார் இயக்குனர் தேசிங் பெரியசாமி.
ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் STR 48 திரைப்படத்தின் கதையை தான் தேசிங் பெரியசாமி ரஜினியிடம் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
