தமிழக முதல்வராக நடிக்க மறுத்த ரஜினிகாந்த்.. காரணம் இவர் தானா
முதல்வன்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஷங்கர். இவர் இயக்கத்தில் பல படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளது.
அந்த வகையில் 1999-ம் ஆண்டு வெளிவந்த முதல்வன் படம் மாபெரும் வெற்றி பெற்று ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அர்ஜுன் நாயகனாக நடித்து, மனிஷா கொய்ராலா, ரகுவரன், மணிவண்ணன், வடிவேலு, லைலா என பலர் நடித்திருந்தனர்.
நடிக்க மறுத்த ரஜினிகாந்த்
இப்படத்தில் இடம்பெறும் ஒரு நாள் முதல்வர் என்ற கான்செப்ட் பலரால் பேசப்பட்டது. ஆனால், இந்த படத்தில் நாயகனாக நடிக்க முதலில் நடிகர் ரஜினியிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றுள்ளது. ஆனால், ரஜினி இந்த படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.
அதற்கு முக்கிய காரணம் அந்த நேரத்தில் முதலமைச்சராக கருணாநிதி தானாம். பெரியவர் நாட்டை ஆண்டுகொண்டிருக்கும் பொழுது இப்படத்தில் நடிக்க தனக்கு விருப்பம் இல்லை என்று உறுதியாக கூறியதாகவும் அமைச்சர் எ.வ.வேலு 'கலைஞர் எனும் தாய்' நூல் வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார்.