நடிகையின் காலை பிடிக்க முடியாது என்று கூறிய ரஜினிகாந்த்.. காரணம் இதுதான்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரம் என்ற அந்தஸ்தில் இருப்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அண்ணாத்த படம் ஓரளவு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் தனது 169வது படத்தில் நடிக்கவுள்ளார்.
ரஜினிகாந்தின் நடிப்பில் கடந்த 1989ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சிவா. இப்படத்தில் ரகுவரன், ஷோபனா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
நடிக்க மறுத்த ரஜினி
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியில் நடிகை ஷோபனாவின் கால்களை ரஜினிகாந்த் பிடிக்கவேண்டுமாம்.
ஆனால், 'நான் ஷோபனாவின் கால்களை பிடிக்கும் காட்சியில் நடிக்க மாட்டேன், எனது ரசிகர்கள் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்' என்று ரஜினிகாந்த் மறுத்துவிட்டாராம்.
இந்த தகவலை நடிகை ஷோபனா பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.