2.0 படத்தில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
2.0
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த திரைப்படம் 2.0.
இப்படம் இதற்கு முன் வெளிவந்த எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் என்பதை நாம் அறிவோம்.

எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் என்பதினால் இப்படத்தின் மீது அளவுகடந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்திருந்தார்கள்.
ஆனால், இப்படம் சற்று ஏமாற்றத்தை கொடுத்தது. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் மற்றும் ஏமி ஜாக்சன் நடித்திருந்தார்கள்.
ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம்
இப்படத்தில் நடிப்பதற்காக ரூ. 1.5 கோடி நடிகை ஏமி ஜாக்சன் சம்பளமாக வாங்கியிருந்தார் என்று ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், இப்படத்தில் ஹீரோவாக நடிக்க நடிகர் ரஜினிகாந்த் ரூ. 65 கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.