ஜெயிலர் 2 படத்திற்காக ரஜினிகாந்த் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
ஜெயிலர்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்து இண்டஸ்ட்ரி ஹிட் ஆன திரைப்படம் ஜெயிலர். இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த், நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் என மூவருக்கும் சொகுசு கார்களை பரிசாக வழங்கினார் தயாரிப்பாளர் கலாநிதி மாறன்.
தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்த திரைப்படங்களில் அதிகம் வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனை படைத்த இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க திட்டமிட்டுள்ளனர். அதற்கான வேலைகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என சொல்லப்படுகிறது.
ரஜினிகாந்த் சம்பளம்
ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு Hukum என தலைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். லோகேஷ் கனகராஜின் கூலி திரைப்படத்தை முடித்துவிட்டு ரஜினிகாந்த் ஜெயிலர் 2ல் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ஜெயிலர் 2 திரைப்படத்திற்காக ரஜினிகாந்த் ரூ. 250 கோடி வரை சம்பளம் வாங்கப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
