ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்த பேட்ட படத்திற்காக நடிகர் ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

By Kathick Jul 26, 2022 04:30 AM GMT
Report

ரஜினிகாந்தின் பேட்ட

தமிழ் சினிமாவின் டாப் நடிகரான ரஜினிகாந்த் அடுத்ததாக நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை சன் பிச்சர்ஸ் தயாரிக்கிறது. ரஜினிகாந்தின் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றியடைந்த திரைப்படம் பேட்ட.

ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்த பேட்ட படத்திற்காக நடிகர் ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Rajinikanth Salary For Superhit Petta Movie

கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து முதல் முறையாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் திரிஷா, சிம்ரன், நவாஸுதீன் சித்திக், சசி குமார், மாளவிகா மோகனன், குரு சோமசுந்தரம், இயக்குனர் மஹேந்திரன் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தார்கள். ரஜினியின் தீவிர ரசிகரான இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ், படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு காட்சியையும் ரஜினியை நினைவில் வைத்து செம மாஸாக செதுக்கி இருந்தார்.

ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்த பேட்ட படத்திற்காக நடிகர் ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Rajinikanth Salary For Superhit Petta Movie

ரஜினி வாங்கிய சம்பளம்

இந்நிலையில், இப்படத்தில் நடிக்க சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ரூ. 65 கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படம் உலகளவில் சுமார் ரூ. 230+ கோடி வரை பாக்ஸ் ஆபிசில் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US