சிவாஜி படத்திற்காக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
ஷங்கர் - ரஜினிகாந்தின் சிவாஜி
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து கடந்த 2007ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் சிவாஜி.
சந்திரமுகி படத்தின் வெற்றியை அடுத்து வெளிவந்த சிவாஜி திரைப்படம் ரஜினியின் திரை வாழ்க்கையில், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் முக்கிய ஒன்றாக அமைந்தது.
இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ஸ்ரேயா, விவேக், சுமன் , மணிவண்ணன், வடிவுக்கரசி, ரகுவரன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
சம்பள விவரம்
மாஸ், கமெர்ஷியல் மற்றும் சமூக அக்கறை, நகைச்சுவை என பல விஷயங்கள் மூலம் மக்களின் மனதை கவர்ந்த இப்படத்திற்காக நடிகர் ரஜினிகாந்த் சுமார் ரூ. 18 கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இப்படத்திற்காக ரூ. 1000 மட்டுமே அட்வான்ஸாக சூப்பர்ஸ்டார் வாங்கியுள்ளாராம். சமீபத்தில் கூட, இப்படத்தின் 15 நிறைவு நாளுக்கு, இப்படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி கூறி ஆடியோவை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.