சம்பளத்தை பற்றி கவலைப்படாத ரஜினிகாந்த்.. கோடிகோடியாய் கொட்டி கொடுக்கும் தயாரிப்பு நிறுவனம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ஜெயிலர் படம் உருவாகி வருவதை நாம் அறிவோம். இப்படத்தை நெல்சன் திலிப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
ஜெயிலர் படத்திற்கு பின் லால் சலாம், தலைவர் 170 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்த இரு திரைப்படங்களையும் முடித்தபின் லோகேஷ் கனகராஜுடன் ரஜினிகாந்த் இணைவார் என தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தை தயாரிக்க தமிழ் சினிமாவின் பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் போட்டிபோட்டனர். இந்த போட்டியில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வென்றுவிட்டது என தெரியவந்துள்ளது.
தலைவர் 171 படத்திற்கான சம்பளம்
இதன்முலம் மீண்டும் ஒரு முறை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கிறார். இந்நிலையில், இப்படத்தில் நடிக்க நடிகர் ரஜினிகாந்திற்கு ரூ. 115 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.
என்னடா இது ரஜினிகாந்தின் சம்பளம் இவ்வளவு குறைவாக இருக்கிறதே என கேள்வி எழுந்துள்ளது. ஆனால், ரஜினிகாந்த் தன்னுடைய சம்பளத்தை பற்றி கவலைப்படவில்லையாம்.
அவருக்கு பாட்ஷா போல் மாபெரும் ஹிட் படம் தான் வேண்டும் என்பதற்காக சம்பளம் எவ்வளவு இருந்தாலும் ஓகே சொல்லிவிட்டாராம்.
மேலும் இப்படத்தை இயக்கப்போகும் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு ரூ. 40 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இரண்டு நாட்களில் பொன்னியின் செல்வன் 2 வசூல் எவ்வளவு தெரியுமா, இதோ