வேட்டையன் படத்திற்காக ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
வேட்டையன்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் தற்போது பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் வேட்டையன். இப்படத்தை பிரபல இயக்குனர் TJ ஞானவேல் இயக்கியுள்ளார்.
இவர் இதற்கு முன் இயக்கிய ஜெய் பீம் திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. வேட்டையன் படத்தில் ரஜினியுடன் இணைந்து பகத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், ராணா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனும் இப்படத்தில் நடித்துள்ளார்.
ரஜினிகாந்த் சம்பளம்
இந்நிலையில், இப்படத்தில் நடிப்பதற்காக ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் ஹீரோவாக நடிக்க நடிகர் ரஜினிகாந்த் ரூ. 100 கோடி வரை சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.
லைகா நிறுவனம் தயாரிப்பில் ரஜினி நடித்து வெளிவந்த தர்பார் படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. இதனால் அந்த சமயத்தில் ரஜினிகாந்த் லைக்காவின் தயாரிப்பில் மேலும் இரண்டு படங்களில் நடிப்பதாக வாக்குறுதி கொடுத்துள்ளாராம்.
அந்த இரண்டு படங்களுக்கும் சேர்த்து ரூ. 125 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். அதில் வேட்டையன் படத்திற்கு ரூ. 100 கோடி சம்பளமும், கெஸ்ட் ரோலில் நடித்த லால் சலாம் படத்திற்கு ரூ. 25 கோடி சம்பளமும் ரஜினிகாந்த் வாங்கியதாக சொல்லப்படுகிறது.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
