1986ல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டு காலமாக டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.
இவருடைய நடிப்பில் தற்போது உருவாகவுள்ள திரைப்படம் தலைவர் 169. இப்படத்தை நெல்சன் திலிப்குமார் இயக்குகிறார்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன் நடிப்பதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
இப்படத்திற்காக நடிகர் ரஜினிகாந்த் ரூ. 100 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
1986ல் வாங்கிய சம்பளம்
இந்நிலையில், தற்போது ரூ. 100 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கி வரும் நடிகர் ரஜினிகாந்த், 1986ஆம் ஆண்டு வெளிவந்த நான் அடிமை இல்லை படத்தில் நடிக்க ரூ. 25 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளார்.

1986ல் அதிகம் சம்பளம் வாங்கியுள்ள டாப் நடிகர்களில் ரஜினிகாந்தும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.