பிரபல நடிகையை மனைவியாக்க ஆசைப்பட்ட ரஜினிகாந்த்.. யார் அந்த நடிகை தெரியுமா
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த ஜெயிலர் மாபெரும் வெற்றியடைந்த நிலையில், தற்போது வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார். இதன்பின் மாரி செல்வராஜுடன் இணைகிறார் என லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது.
ரஜினிகாந்த் கடந்த 1981ஆம் ஆண்டு லதா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என இரு மகள்கள் உள்ளனர் என்பதை நாம் அறிவோம்.
பிரபல நடிகையை காதலித்த ரஜினி
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் வாழ்க்கையில் ஏற்பட்ட காதல் தோல்வி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, அதன்பின் கதாநாயகியாக முன்னணியில் வலம் வந்தவர் ஸ்ரீதேவி.
இவர் ரஜினியுடன் இணைந்து முதல் முறையாக மூன்று முடிச்சு என்ற படத்தில் நடித்தார். இதன்பின் ரஜினி - ஸ்ரீதேவி ஜோடி 22 படங்களுக்கு மேல் இணைந்து நடித்துள்ளனர். ஸ்ரீதேவியுடன் இணைந்து நடிக்கும்போது ஸ்ரீதேவி மேல் காதல் கொண்டுள்ளார் ரஜினிகாந்த்.
ஸ்ரீதேவியின் குடும்பத்தினருடனும் நல்ல நட்புறவு கொண்டிருந்த காரணத்தினால் தனது காதலை ஸ்ரீதேவியிடம் கூறி, அவர் வீட்டார்களிடம் பெண் கேட்கலாம் என எண்ணியுள்ளாராம்.
ஸ்ரீதேவியின் வீடு கிரகப்பிரவேசத்திற்கு சென்ற ரஜினிகாந்த், அப்போது தனது காதலை ஸ்ரீதேவியிடம் கூறலாம் என முடிவு செய்துள்ளார்.
அப்போது திடீரென ஸ்ரீதேவியின் வீட்டில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் நேரம் சரியாக இல்லை என நினைத்து பெண் கேட்காமல் திரும்பிவிட்டாராம். இந்த விஷயத்தை இயக்குனர் பாலச்சந்தர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.