சுயசரிதை எழுதும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. மகள் சௌந்தர்யா கூறிய தகவல்
ரஜினிகாந்த்
தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து உலகளவில் ரசிகர்களால் சூப்பர்ஸ்டார் என கொண்டாடப்பட்டு வருகிறார் நடிகர் ரஜினிகாந்த்.

இவர் நடிப்பில் கடைசியாக கூலி திரைப்படம் வெளிவந்து கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும் உலகளவில் ரூ. 500+ கோடி வசூல் செய்ததாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். கூலி படத்தை தொடர்ந்து தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வருகிற ஜூன் மாதம் வெளிவரவுள்ளது.

இதன்பின் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் உருவாகி தனது 173வது படத்தில் நடிக்கவுள்ளார். இதுமட்டுமின்றி கமலுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுயசரிதை
தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ள ரஜினிகாந்த், தனது சுயசரிதையை எழுத முடிவு செய்துள்ளாராம். இதுகுறித்து ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இதில், "அப்பா தற்போது தனது சுயசரிதை வேலைகளில் ஈடுபட்டுள்ளார். அவருடைய வாழ்க்கை கதை உலகளவில் சென்சேஷனலாக மாறும்" என கூறியிருக்கிறார்.