சூப்பர் ஹிட் படம் கொடுத்த இயக்குனரை அடுத்த படத்திற்கு ஓகே செய்த நடிகர் ரஜினிகாந்த்.. யார் தெரியுமா?
ரஜினிகாந்த் நடிகர் ரஜினிகாந்த், தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகராக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக இருந்து வருகிறார். கடைசியாக சன் பிக்சர்ஸ் தயாரிக்க நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படம் நடிக்க மாபெரும் வசூல் வேட்டை நடத்தியது.
அப்படத்தை தொடர்ந்து ரஜினி வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை முடித்த கையோடு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க தயாராகியுள்ளார். இப்படத்திற்கு கூலி என பெயரிடப்பட்டுள்ளது, ஜுலையில் படப்பிடிப்பு துவங்குகிறது.
புதிய படம்
இந்த நிலையில் நடிகர் ரஜினி அடுத்து கார்த்திக் சுப்புராஜுடன் கூட்டணி அமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. ரஜினிக்கு கார்த்திக் சுப்புராஜ் ஒரு கதை கூற அது அவருக்கு பிடித்துவிட்டதாம். லோகேஷ் கனகராஜ் படத்தை முடித்த கையோடு கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணைவார் என்கின்றனர்.
ரஜினி-கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் வெளியான பேட்ட திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.

Super Singer: சூப்பர் சிங்கரில் நடுவர்களை நடுநடுங்க வைத்த சம்பவம்... அட்டகாசமான ப்ரொமோ காட்சி Manithan

நான் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தது.. உதயநிதி காய்ச்சலே வந்து படுத்துக்கொண்டார் - இபிஎஸ் IBC Tamilnadu
