திடீரென மாறிய ரஜினிகாந்த்.. இனி இந்த பாதையில் தான் பயணமா
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டார் என கொண்டாடப்படுபவர் ரஜினிகாந்த். நேற்று மட்டுமல்ல இன்று, நாளை என்றும் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் இவர் மட்டும் தான்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அண்ணாத்த படம் எதிர்பார்த்த வெற்றியை தேடி தரவில்லை. மேலும் தற்போது இவர் நடிப்பில் ஜெயிலர் படம் உருவாகி வருகிறது.

இப்படத்தை தொடர்ந்து தன்னுடைய மகள் இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் இஸ்லாமியர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
லால் சலாம் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கவிருந்த படத்தை சிபி சக்ரவத்தி இயக்குவதாக இருந்தது. ஆனால், தற்போது சிபி சக்கரவத்தி அப்படத்திலிருந்து வெளியேறிவிட்டார்.
இனி இந்த பாதை தான்
அவருக்கு பதிலாக வேறு யார் ரஜினியை இயக்க போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், பி.வாசு பெயர் அடிபட்டது. ஆனால், அவரும் ரஜினியை இயக்கப்போவதில்லை என தற்போது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், ஜெய் பீம் படத்தை இயக்கிய தா.செ. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கமெர்ஷியல் ஹீரோவாக நடித்து வந்த ரஜினிகாந்த் பல ஆண்டுகள் கழித்து புதிய பாதையை தேர்ந்தெடுத்துள்ளார் என பேசப்பட்டு வருகிறது. தா. செ. ஞானவேல் மற்றும் ரஜினிகாந்த் இணையும் படம் கண்டிப்பாக மாபெரும் வெற்றியடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
துணிவு - வாரிசு மூன்றாவது நாள் வசூல்.. அதிக வசூல் யாருக்கு