ரஜினிக்கு ஆளுநர் பதவி? அவரது அண்ணன் கொடுத்த பேட்டி
சூப்பர்ஸ்டார் ரஜினி அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து வந்தனர். தொடர்ந்து அரசியலுக்கு வருவதாக கூறி வந்த ரஜினிகாந்த் இறுதியில் தனது உடல்நிலை காரணமாக அரசியலுக்கு வர முடியாது என உருத்தியாக அறிவித்துவிட்டார்.
சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படம் 600 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்து சாதனை படைத்து இருக்கிறது.
இந்த நிலையில் ரஜினி இமயமலைக்கு சுற்றுலா சென்று இருந்த நிலையில் பல அரசியல்வாதிகளை சந்தித்து இருந்தார். உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்த போது அவர் காலில் விழுந்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.
கவர்னர் பதவி?
இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு கவர்னர் பதவி வரப்போவதாக ஒரு தகவல் பரவி வருகிறது.
இது பற்றி ரஜினியின் அண்ணனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, 'அது ஆண்டவன் முடிவு' என கூறி இருக்கிறார்.