32 ஆண்டுகளுக்கு பின் அந்த நடிகருடன் கைகோர்க்கும் ரஜினிகாந்த்.. யாரும் எதிர்பார்க்காத மாஸ் கூட்டணி
ரஜினிகாந்த் படங்கள்
ஜெயிலர் படப்பிடிப்பை சமீபத்தில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முடித்தார். அதை தொடர்ந்து தன்னுடைய மகளின் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு பின் TJ ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் திரைப்படம் தான் தலைவர் 170. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தில் வில்லனாக முதலில் விக்ரம் நடிக்கிறார் என தகவல் வெளிவந்தது. பின் அவர் நடிக்கவில்லை என்றும், அவருக்கு பதிலாக அர்ஜுனிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என்றும் கூறப்பட்டது.
மாஸ் கூட்டணி
இந்நிலையில், தலைவர் 170 படத்தில் ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடிக்கவுள்ளார் என தகவல் தெரிவிக்கின்றனர்.
கடந்த 1991ம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த ஹம் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 32 ஆண்டுகளுக்கு கழித்து ரஜினி - அமிதாப் பச்சன் இணைந்து நடிக்கும் திரைப்படமாக இது அமையும். பொறுத்திருந்து பார்ப்போம் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளிவரும் என்று..
ஒட்டுமொத்தமாக ஆளே மாறிப்போன இலங்கை பெண் லாஸ்லியா.. அவருடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri
