5 நாட்களில் உலகளவில் வேட்டையன் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
ரஜினியின் வேட்டையன்
வேட்டையன் படம் கடந்த வாரம் வெளிவந்த நிலையில் தொடர்ந்து வசூலில் வரவேற்பை பெற்று வருகிறது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான இப்படத்தை லைகா தயாரிக்க, TJ ஞானவேல் இயக்கியிருந்தார்.
பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சிலர் இப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களையும் தெரிவித்தனர். ஆனால், அவை யாவும் இப்படத்தை எந்த வகையிலும் பாதிக்கவில்லை.
வசூல் விவரம்
முதல் நாளில் இருந்தே இப்படத்தின் வசூல் அதிகரித்து கொண்டே இருந்த நிலையில், 5 நாட்களில் உலகளவில் வேட்டையன் படம் ரூ. 210 கோடி வசூல் செய்துள்ளது.
4 நாட்களில் ரூ. 200 கோடி வசூல் செய்திருந்த வேட்டையன், இரண்டாவது வாரத்தின் துவக்கத்தில் சற்று பின்னடைவை சந்தித்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் இனி வரும் நாட்களில் வேட்டையன் வசூல் எப்படி இருக்கப்போகிறது என்று.