தமிழ்நாட்டில் 7 நாட்களில் வேட்டையன் படம் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

Kathick
in திரைப்படம்Report this article
வேட்டையன்
வேட்டையன் படம் இந்த ஆண்டு ரஜினிகாந்த் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம். லால் சலாம் படத்தில் ரஜினி கேமியோ ரோலில் நடித்திருந்தாலும், ஜெயிலர் படத்திற்கு பின் ஹீரோவாக அவர் நடித்து வெளிவந்துள்ள படம் என்றால் அது வேட்டையன் தான்.
TJ ஞானவேல் இயக்கிய இப்படம் சமூகத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து அமிதாப் பச்சன், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், பகத் பாசில், ரித்திகா சிங், ராணா என பலரும் நடித்திருந்தனர்.
தமிழக வசூல் விவரம்
உலகளவில் இப்படம் இதுவரை ரூ. 220 கோடி வசூல் செய்துள்ளது என்கின்றனர். இந்த நிலையில், தமிழகத்தில் வேட்டையன் படம் 7 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் 7 நாட்களில் தமிழகத்தில் ரூ. 89 கோடி வரை வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ. 100 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.