ரஜினியின் வேட்டையன் பட OTT ரைட்ஸ் மட்டுமே இத்தனை கோடியா?.. முழு வசூல் எவ்வளவு?
வேட்டையன்
ரஜினியின் வேட்டையன் படம் கடந்த அக்டோபர் 10ம் தேதி உலகம் முழுவதும் படு பிரம்மாண்டமாக வெளியானது.
ஜெய் பீம் பட புகழ் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் தயாரான இந்த படத்தில் ரஜினியை தாண்டி அமிதாப் பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் என பலர் நடித்துள்ளனர்.
ரஜினி படத்தில் போலீஸ் அதிகாரியாகவும், அமிதாப் பச்சன் என்கவுண்டரை எதிர்க்கும் வழக்கறிஞராக நடித்திருக்கிறார். ரூ. 200 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் நல்ல வசூல் வேட்டை நடத்தியது.
ஓடிடி ரைட்ஸ்
படம் வெளியான நாள் முதல் நல்ல வசூல் வேட்டை நடத்திவரும் நிலையில் இதுவரை ரூ. 255 கோடி வரை கலெக்ஷன் செய்துள்ளது. அதோடு ரஜினியின் வேட்டையன் படத்தின் ஓடிடி ரைட்ஸ் ரூ. 100 கோடிக்கு விலைபோனதாக கூறப்படுகிறது.