ஹிட் படமாக அமைய ரஜினியின் வேட்டையன் எவ்வளவு வசூலிக்க வேண்டும் தெரியுமா?

Yathrika
in திரைப்படம்Report this article
வேட்டையன்
தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த், இந்திய சினிமா கொண்டாடும் பிரபலமாக இருக்கிறார்.
இவரது நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது.
அப்பட வெற்றியை தொடர்ந்து ரஜினி நடித்துள்ள திரைப்படம் வேட்டையன், ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ள இப்படம் வரும் அக்டோபர் 10, அதாவது நாளை ரிலீஸ் ஆக இருக்கிறது.
ஏராளமான நடிகர்கள் நடித்துள்ள இப்படம் முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ. 70 முதல் ரூ. 80 கோடி வரை வசூலிக்கும் கூறப்படுகிறது.
பாக்ஸ் ஆபிஸ்
ரூ. 300 கோடி பட்ஜெட்டில் இப்படம் தயாராகி இருப்பதாக இப்பட இயக்குனர் ஞானவேல் சமீபத்திய ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
இந்த நிலையில் ரஜினியின் வேட்டையன் படம் எவ்வளவு வசூலித்தால் ஹிட் படமாக அமையும் என கணிக்கப்பட்டுள்ளது.
ரூ. 325 கோடி வரை ரஜினியின் வேட்டையன் வசூலித்தால் ஹிட் படமாக அமையும் என கூறப்படுகிறது.