ரஜினியின் வேட்டையன் படத்தின் முதல் விமர்சனம்... பாக்ஸ் ஆபிஸ் தெறிக்கப்போகுது
வேட்டையன்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் லிஸ்டில் டாப்பில் இருப்பது ரஜினி மற்றும் விஜய்.
கடந்த செப்டம்பர் 5ம் தேதி விஜய்யின் கோட் படம் வெளியாகி ரூ. 400 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
அடுத்து தமிழ் சினிமாவில் வெளியாகப்போகும் பெரிய நடிகரின் படம் என்றால் அது வேட்டையன் தான்.
ஞானவேல் இயக்கத்தில் ரஜினி, அமிதாப் பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் என பலர் நடித்துள்ள இப்படம் வரும் அக்டோபர் 10ம் தேதி வெளியாக இருக்கிறது.
அனிருத் இசையமைக்க இப்படம் ரூ. 160 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாம்.
படத்தில் இடம்பெற்ற மனசிலாயோ பாடல் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் கலக்கியுள்ளது. அதோடு இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படு பிரம்மாண்டமாக அண்மையில் நடந்து முடிந்தது.
முதல் விமர்சனம்
அக்டோபர் 10ம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான முதல் விமர்சனம் வந்துள்ளது.
படம் வந்து செமயா வந்திருக்காம், பகத் பாசில் வடிவேலு மாதிரி டிராக் காமெடி எல்லாம் செய்து அமர்க்களம் செய்துள்ளாராம். படத்தை பார்த்துவிட்டு ரஜினி செம ஹேப்பி என கேள்விப்பட்டதாக பிக்பாஸ் புகழ் அபிஷேக் கூறியுள்ளார்.

இரவு முழுவதும் அவர்களை மகிழ்விக்கவே... - அழகிப்போட்டியில் இருந்து வெளியேறிய பெண் குற்றச்சாட்டு IBC Tamilnadu
