ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தை வெளியிட தடையா? நீதிமன்றம் தீர்ப்பு இதுதான்
வேட்டையன்
ஞானவேல் இயக்கத்தில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான படம் 'வேட்டையன்'. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் அமிதாப் பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைப்பில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் இந்த படம் வரும் அக்டோபர் 10 - ம் தேதி வெளிவர உள்ள நிலையில், இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியானது.
தொடரப்பட்ட வழக்கு
இந்நிலையில், வேட்டையன் படத்திற்கு தடை விதிக்க கோரி மெட்ராஸ் உயர்நீதிமன்றத்திற்கு மதுரையை சேர்ந்த பழனிவேலு என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், 'படத்தில் இடம்பெற்றுள்ள என்கவுன்ட்டர் தொடர்பான வசனங்களை படம் ரிலீஸ்க்கு முன் நீக்க வேண்டும் அல்லது மியூட் செய்ய வேண்டும், அதுவரை இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்' என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.
இந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரிக்கப்பட்ட நிலையில், வேட்டையன் படத்திற்கு தடை விதிக்கமுடியாது என மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan
