தமிழ்நாட்டில் 3 நாட்களில் வேட்டையன் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
TJ ஞானவேல் - வேட்டையன்
கூட்டத்தில் ஒருத்தன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக மாறியுள்ளார் TJ ஞானவேல்.
இவரை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்த திரைப்படம் ஜெய் பீம். சமூக நீதி குறித்து பேசிய இப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளிவந்திருந்தாலும் மக்கள் மனதில் இடம்பிடித்தது.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஞானவேல் இயக்கத்தில் வெளிவந்த படம் வேட்டையன். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் முதல் முறையாக ஞானவேல் கைகோர்த்த நிலையில், படத்தை பற்றிய எதிர்பார்ப்பு மாபெரும் அளவில் இருந்தது.
கடந்த 10ஆம் தேதி வெளிவந்த வேட்டையன் படத்திற்கு சிலர் நெகட்டிவ் விமர்சனங்கள் தெரிவித்து வந்தாலும் கூட, பலரும் இப்படத்தை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள்.
தமிழக வசூல்
இந்த நிலையில், 3 நாட்களில் தமிழ்நாட்டில் இப்படம் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் தமிழ்நாட்டில் 3 நாட்களில் ரூ. 57 கோடி வசூல் செய்துள்ளது.
இன்னும் சில நாட்களில் ரூ. 100 கோடியை அசால்டாக கடந்துவிடும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.