ரசிகரின் குடும்பத்திற்காக ரஜினிகாந்த செய்த நெகிழ்ச்சியான செயல்.. வைரலாகும் வீடியோ
ரஜினிகாந்த
தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக, ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டு வருபவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.
இவர் நடிப்பில் வெளிவந்த வேட்டையன் படம் மாபெரும் வெற்றியடைந்துள்ள நிலையில், தற்போது இவர் நடிப்பில் கூலி திரைப்படம் வெளியாக உள்ளது.
அதை தொடர்ந்து, ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். இத்தனை ஆண்டுகளாக சூப்பர் ஸ்டார் என்று மக்களால் அவர் கொண்டாட பட காரணம் ரஜினி அவர் ரசிகர்கள் மீது வைத்திருக்கும் அன்பு தான்.
நெகிழ்ச்சியான செயல்
இந்நிலையில், ரஜினிகாந்த் குறித்து தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது, ரஜினிகாந்த் தற்போது வெளிநாட்டில் இருக்கும் நிலையில், அங்கு நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
அப்போது அங்கு வசிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த குடும்பம் ஒன்று ரஜினியை கண்டு நலம் விசாரித்துள்ளனர். மேலும் தன் குழந்தைகள் வீட்டில் இருப்பதாக கூறி ஒரு நிமிடம் காத்திருக்குமாறு கேட்டுள்ளனர்.
அப்போது ரஜினி அவரே முன் வந்து அந்த குடும்பத்தினர் வீட்டிற்கு சென்று குழந்தைகளை சந்தித்துள்ளார். தற்போது, இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
The lucky family and humbleness of greatest living legend of Indian cinema #SuperstarRajinikanth ❤️#Rajinikanth | #Superstar @rajinikanth | #Coolie | #Jailer | #Jailer2 pic.twitter.com/8IbDxhYNS1
— Suresh Balaji (@surbalu) April 2, 2025