விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் பிரச்சனை குறித்து கேட்கப்பட்ட கேள்வி... ரஜினியின் பதில்
ஜனநாயகன்
நடிகர் விஜய்யின் கடைசிப்படமாக உருவானது தான் ஜனநாயகன். எச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெச்ட், பாலிவுட் நடிகர் பாபி தியோல் என பலர் நடிக்க உருவான இப்படத்திற்கு அனிருத் தான் இசை.
இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் பிரம்மாண்டத்தின் உச்சமாக கடந்த வருடம் டிசம்பர் மாதம் மலேசியாவில் நடைபெற்றது. முதலில் விஜய் படங்களின் ஹிட் பாடல்கள் கச்சேரி நடந்தது, அடுத்து ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடந்தது.
மலேசியாவிலும் இசை வெளியீடு பல ரெக்கார்ட் படைத்தது. ஜனவரி 9, 2026 ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆக வேண்டியது, ஆனால் இன்னும் பிரச்சனையை சந்தித்து வருகிறது.

ரஜினி பதில்
வழக்கமாக வெளியூர் சென்றுவிட்டு விமானம் மூலம் சென்னை வரும் பிரபலங்களிடம் பேட்டி எடுப்பது வழக்கம்.

அப்படி சமீபத்தில் சென்னை வந்த ரஜினியிடம், விஜய்யின் ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகவில்லை, பிரச்சனையை சந்திக்கிறது இதுகுறித்து உங்களது கருத்து என்ன என கேட்டுள்ளனர். அதற்கு சிம்பிளாக, நோ கமெண்ட்ஸ், கருத்து சொல்ல விரும்பல என கூறிவிட்டு சென்றுள்ளார்.