படப்பிடிப்பிற்கு செல்லும் வழியில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம்! வைரலாகும் வீடியோ
ரஜினிகாந்த்
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டு வருபவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.
இவர் நடிப்பில் வெளிவந்த வேட்டையன் படம் மாபெரும் வெற்றியடைந்துள்ள நிலையில், தற்போது இவர் நடிப்பில் கூலி திரைப்படம் வெளியாக உள்ளது.

சில நடிகர்கள் பெண்களை மதிப்பவர்கள் போன்று காட்டிக்கொள்வார்கள் ஆனால்.. ரகசியத்தை உடைத்த நடிகை மாளவிகா
அதை தொடர்ந்து, ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகர்கள் எஸ். ஜே. சூர்யா மற்றும் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தற்போது தமிழக - கேரள எல்லையான கோவை ஆனைக்கட்டி, மாங்கரை பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
சாமி தரிசனம்!
இந்நிலையில், படப்பிடிப்பிற்காக ஆனைக்கட்டியில் இருந்து மாங்கரைக்கு காரில் சென்றுள்ள ரஜினி அங்கு வழியில் மாதேஸ்வரர் கோவிலை பார்த்ததும் கீழே இறங்கி சாமி தரிசனம் செய்துள்ளார்.
அப்போது அங்கு ரசிகர்கள் கூட அவர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோ மற்றும் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.