ரஜினிகாந்த் நடிக்க விரும்பிய கதை.. ஆனால் நிறைவேறாமல் போன ஆசை! இந்த படம் தான்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து ஜெயிலர் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். நெல்சன் இயக்கும் அந்த படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. விரைவில் ஷூட்டிங்கும் தொடங்க இருக்கிறது.
இந்நிலையில் தற்போது ரஜினிகாந்தை இன்று ஆர்.பார்த்திபன் சந்தித்து பேசி இருக்கிறார். இரவின் நிழல் படம் பார்த்த ரஜினி அவரை வீட்டிற்கே அழைத்து பாராட்டி இருக்கிறார்.
அப்போது ரஜினி அவரிடம் 'நீங்க பொன்னியின் செல்வன் படத்தில் என்ன ரோலில் நடிக்கிறீங்க' என கேட்டாராம். அதற்கு அவர் பதில் கூற, தானும் பொன்னியின் செல்வன் கதையை பல முறை படித்திருக்கிறேன் என ரஜினி கூறினாராம்.

பொன்னியில் செல்வனில் நடிக்க ஆசை
மேலும் அந்த படத்தில் நடிக்க ஆசை இருந்தது என்றும் ரஜினி கூறினாராம். தான் ஷூட்டிங் செல்லும் போது கிடைக்கும் இடைவேளை நேரங்களில் பொன்னியின் செல்வன் படித்தேன் எனவும் பார்த்திபனிடம் அவர் கூறி இருக்கிறார்.
இந்த விஷயத்தை லைவ் வீடியோவில் பார்த்திபன் தெரிவித்திருக்கிறார்.
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri